மீண்டும் களமிறங்கியது ஜாவா பைக்குகள்.1960 களில் இந்திய இருசக்கர வாகன சந்தையில் புல்லட்.ராஜ்தூத் மற்றும் ஜாவா பைக்குகளே இருந்தன. கிராமபுறங்களில் ராஜ்தூத் பைக்குகள் நல்ல வரவேற்பையும் புல்லட் பைக்குகள் நகரப்பகுதிகளில் வரவேற்பையும் பெற்று இருந்தது. ஜாவா பைக்குகள் கிராம் நகரம் இரு பகுதிகளிலும் கவர்ந்த வாகனமாக திகழ்ந்தது. அதன் ஸ்டைலான முன்புற சற்று நீளமான போர்க் கிராமபுற கரடு முரடான சாலைகளில் எந்தவித அதிர்வையும் தாங்கியதால் அது எல்லோராலும் விரும்பப்பட்டது.மற்றும் மலைப்பாதையில் இதன் ஏறும் திறன் மிகப் பிரபலமானது. எந்த விதமான சறுக்கல் இல்லாமல் மலைப்பாதையில் வேகமாக ஏறுவதற்கு என்றே பலரால் விரும்பும் பைக்காக திகழ்ந்தது. இதன் ஸ்டைலான ஸ்டார்டிங் கிக்கரில் இணைந்த கியர் மாற்றுவது அலாதி பிரியமான ஒன்று.
இது செக்கஸ்லோவாகிய நாட்டின் 'ஜாவா' நிறுவனமும் இந்தியாவில் 'பிளாக் கோல்டு' என்னும் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் கர்நாடகா மாநிலம் மைசூரில் தயாரிக்கப்பட்டது. இந் நிறுவனம் பிரபலமான மைசூர் மன்னர் குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்டது.1980 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானிய கூட்டு நிறுவனங்களால் Honda, Suzuki,Kawasaki போன்ற நிறுவனங்களின் போட்டியால் விற்பனை பாதிக்கப்பட்ட தால் 1990 ம் ஆண்டு உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின் 1994 ம் ஆண்டு பல்வேறு பிரச்சினை களுக்கு பின் ' பிளாக்கோல்டு' நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்கியது.கனிசமான விற்பனை இருந்தும் ஜப்பானிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் மீண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இது ஜாவா பிரியமானனவர்களுக்கு வருத்தத்தை அளித்தது. ஜாவா பிரியர்களால் தொடங்கப்பட்ட 'ஜாவாகிளப்' கள் பிரபலமான ஒன்றாகும். இது கூட்டு குழுக்களாக நெடுந்தொலைவு சுற்றுலா செல்வது வரை , ஸ்பேர் பார்ட்ஸ் பரிமாரிக்கொள்வதில் இருந்து மறு உருவாக்கம் செய்வது வரை பிரமான ஒன்றாகும். ஜாவா பிரியர்களை தவிர இந்த வகை பைக்குகள் முழுமையாக மார்கெட்டில் இருந்து அகன்று விடும் என்ற நிலையில் ' மகேந்திரா' நிறுவனத்தின் முயற்சியால் மீண்டும் தற்போது ஜாவா பைக்குகள் இந்திய சாலைகளில் ஓடும் நிலை வந்தள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் ' மகேந்திரா' நிறுவனம் மிகப் பிரபல மான ஒன்று. இதன் ஜீப்புகள் பல தலைமுறைகளை கடந்து இப்போதும் சிறப்பாக off road வகை விற்பனை யில் முன்னோடியாக திகழ்கிறது. மகேந்திரா நிறுவனம் இருசக்கர வாகன உற்பத்தி யில் இறங்கும் பொருட்டு சில ஆண்டுகளுக்கு முன் ' Kinetic' நிறுவனத்தை கையகப்படுத்தியது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவு விற்பனை யில் சாதிக்க முடியவில்லை . புல்லட் வாகனத்துக்கு போட்டியாக 'மோஜோ ' என்ற பைக்கையும் அறிமுகம் செய்தனர் ஆனால் அவர்களால் அதை தொடற முடியவில்லை. இந்நிலையில் தான் ஜாவா நிறுவனத்தை கையகப்படுத்துவதாக செய்திகள் வெளியாகின.ஏற்கெனவே கைனடிக் நிறுவனத்தை வாங்கியும் இப்போது ஜாவா நிறுவனத்தை வாங்கினால் எப்படி இருசக்கர வாகன துறையில் நிலையான இடத்தை பிடிப்பார்கள் கடினமான ஒன்று என்று கூட சொன்னார்கள். ஆனால் அதை எல்லாம் தவிர்த்து தற்போது மிகுந்த எதிர்பார்புகளுடன் இரண்டு ஜாவா பைக்குகள் மற்றும் ஒரு மேம்பட்ட மாடலுடன் களத்தில் இறங்கி உள்ளது. ஜாவா பைக்கின் சைலன்சர் சத்தமே இதன் பிரபலமான ஒன்றாகும். நான்கு ஸ்டிரோக் இன்ஜினில் அது எப்படி சாத்தியம் என்ற கேள்வி இருந்தது . அதையும் தாண்டி அந்த சத்தத்தை நினைவுபடுத்தி சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ படம் பிரபலம் அடைந்தது.
மகேந்திரா நிறுவனம் ஜாவா பிராண்ட் பைக்கை ' கிளாசிக் லெஜன்ட்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக தற்போது ' ஜாவா' பிரான்டு வகை பைக்குகள் வெளிவருகிறது. இதன் விலையாக தொடக்கம் 155000.00 இல் இருந்து தொடங்குகிறது. மாறி வரும் இளைஞர்கள் மத்தியில் இந்த விலை எல்லாம் பொருட்டே இல்லை. புதிய தலைமுறை இளைஞர்களின் இருசக்கர மோகம் அதிக திறன் வாய்ந்த பைக்குகளை கைஆள்வதில் லாவகமாக செய்கின்றனர். இது 300 சிசி வகை இஞ்சின் சக்தியுடன் ஆறு கியர்களை கொண்டு வெளிவந்துள்ளது. ஜாவா மற்றும் ஜாவா 42 என்று இருவகை பிரிவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் வெளிப்புற கலர்கள் கொள்ளை அழகுடன் மிகுந்த நேர்தியாக இருப்பது அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை. நாடு முழுவதும் முன்னரே அமைக்க பட்ட 160க்கும் மேலான டீலர்களால் வரும் ஜனவரி மாதத்துக்கு முன்பு விற்பனையில் கிடைக்கும் என்று நிறுவனம் சொல்கிறது.இரு சக்கர வாகன பிரியர்களின் மத்தியில் கடந்த இருநாட்களாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விற்பனைக்கு பின் சர்வீஸ் சேவைகளை மிகுந்த கவனத்துடன் டீலர்கள் மேற்கொண்டால் மீண்டும் ஒரு சகாப்தத்தை ஜாவா பிரான்டு உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
Thursday, November 15, 2018
Legend Re born 'Jawa' from Classic Legend
Subscribe to:
Posts (Atom)