Tata Harrior A real SUV from TATA
எஸ்யூவி பிரியர்களுக்கு ஒரு வரபிரசாதமாக டாடா நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பாக சாலையில் களமிறங்க Tata Harrior தயாராக உள்ளது. டாட்டா நிறுவனத்தின் நீண்ட கால வடிவமைப்புக்கு பின் கடந்த சில நாட்களாக Harrior வாகனத்தின் டீசரை வெளியிட்டு எஸ்யூவி பிரியர்களை சந்தோசப்படுத்தி உள்ளது. இது உண்மையில் எஸ்யூவி பிரியர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை. நீண்ட கால தயாரிப்பு வடிவமைப்பு க்கு பின் H5X என்று பெயரிடப்பட்டு இறுதியாக Harrior என்ற கம்பீரமான பெயருடன் தற்போது களத்தில் இறங்க உள்ளது.
இது தற்போது டாடா நிறுவனத்தின் புதிய தயாரிப்பு அகராதி படி ஜாக்குவர் லேண்ட் ரோவர் வாகனத்தின் பிளாட்பாரத்தில் Omega சேசிஸை அடிப்படையில் தயாரிக்கப்படும். இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் வாங்குவதற்காக சில விலை குறைப்பு திட்டப்படி அலுமினிய பாகங்கள் குறைக்க பட்டு உயர்தர ஸ்டீல் பொருட்கள் பயன்படுத்தி தயாரிப்பை மேம்படுத்தி உள்ளது. இதன் விலையாக சுமார் 16 இலட்சம் முதல் 21 இலட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் என்ஜின் பியட் நிறுவனத்தின் 2 லிட்டர் நான்கு சிலிண்டர் கிரையோடெக் வகை இன்ஜின் பொறுத்தப்படுகிறது. இதன் இஞ்சின் சக்தி 138 பிஹெச்பி யுடன் 350 என்எம் டார்க் பவரை வெளிப்படுத்த கூடியது. இதில் 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்படுகிறது. எதிர்காலத்தில் ஆட்டோமேடிக் வகை கியர்களை வெளியிடலாம்.
இதன் உட்புறம் கார் பிரியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நல்ல இடவசதி யுடன் ஐந்து பேர் தாராளமாக பயணம் செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.நல்ல தரமான உட்புற பாகங்கள் நவீனமான வடிவமைப்புடன் உள்ளது. நல்ல உயர்தர லெதர் சீட்டு கள் ஓட்டுபவர்கள் பயணிகள் விமான பயணம் செய்வது போல் இருக்குமாறு வடிவமைக்க ப்பட்டுள்ளது.இதன் வுட் பினிஷ் டாஷ் போர்டு, 8 அங்குல தொடுதிரை , பார்ப்பவர்களை கவரும் விதமான ஸ்டீரிங் வீல் மற்றும் கண்ட்ரோல் உபகரணங்கள் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஒரு அடையாளமாக இருக்கும். மற்றும் பாதுகாப்பு விசயத்தில் கூடுதல் கவனங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வேரியண்ட்களில் இரண்டு முன்புற பாதுகாப்பு பலுன்களும் டாப் வேரியண்ட்களில் ஆறு பாதுகாப்பு பலூன் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஏபிஎஸ் இபிடி பிரேக்குகள் மற்றும் ஆப் ரோடு ஏபிஎஸ் ,ஹில் ஹோல்டு, ஹில் டெசன்ட் கண்ட்ரோல், மற்றும் குரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம் என இதன் உயர்ந்த டிரைவிங் சொகுசு ஏதுவாக இருக்க பல்வேறு வகை வசதிகள் உள்ளது. மேலும் இதன் 17 இன்ச் வகை டயர் கரடுமுரடான சாலைகளுக்கு ஏதுவாக ஐந்து ஆரங்கள் உடைய அலாய் டயர்கள் எடுப்பாக உள்ளது. இதன் முன்புற கிரில் , எல்இடி வகை முகப்பு விளக்குகள் எடுப்பாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒரு உயர்தரமான எஸ்யூவி வேண்டும் என்று நினைப்பவர்கள் Harrior நிச்சயம் ஒரு வரபிரசாதமாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இது மகேந்திரா வின் xuv 5oo வகை காருக்கு கடும் போட்டி இருக்கும் என கருதப்படுகிறது. ஏற்கனவே டாடாவின் நெக்சான் வகை கார் குளோபல் பாதுகாப்பு பரிசோதனை யில் இந்திய அளவில் ஐந்து நட்சத்திர குறியீடு பெற்ற முதல் வாகனமாக தேர்வு பெற்றதால் டாடாவின் தயரிப்புகள் மீதான நம்பிக்கை வாடிக்கையாளர்கள் இடையே நல்ல அபிப்பிராயம் பெற்றுள்ளது.
ஏற்கனவே Harrior முன் பதிவு டாடா டீலர்களால் பதிவு செய்யப்படுகிறது. விரைவில் சாலையில் பயனிப்பதை கவனிப்போம்.
No comments:
Post a Comment