Monday, September 7, 2020

BS 6 Range Light Commercial Vehicles In India

Light Commercial Vehicles 4 wheel segment
இந்த வகை இலகு ரக சரக்கு வாகனங்களை இந்தியாவில் 5 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தயாரித்து சந்தை படுத்துகின்றன.அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்.
1) TATA 2)Eicher 3)SML Isuzu 4)Ashok Leyland 5)Mahindra 6) Force Motors
அதிகபட்சமாக மொத்த எடை 5200 KG  ல் இருந்து 6.5 டன் வரை ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபட்ட வாகனங்களை தயாரிக்கின்றன்.தற்போது இந்திய புகை BS6  புகை விதிகளின் படி இன்ஜின் மாற்றி அமைக்கப்பட்டு தயாரிக்கப்படுவதால்  BS4  வகை வாகனங்களை விட கூடுதல் விலையுடன் தான் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.இந்த இஞ்சினால் சுற்று சூழல் மாசுபாட்டை குறைக்கும் பொருட்டு யூரியா கரைசல் திரவம் புகை போக்கியில் செலுத்தி மாசுபாட்டை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் அதற்கு என்ற தனியாக டேங்குகள் பொறுத்தப்பட்டுள்ளன இது ஓட்டுனருக்கு கூடுதல் செலவு பிடிக்கும்.இந்த வகை வாகனங்கள் இலகு ரக சரக்குகளான காய்கறி, பால், முட்டை, கொரியர்,அட்டைபெட்டிகள் மற்றும் கேஸ் சிலிண்டர் கொண்டு செல்வதற்கும் சில இடங்களில் சிமென்ட் ,பெயின்ட் போன்ற கட்டிட பொருட்கள் கொண்டு செல்வதற்கும் பயன் படுகின்றன்.மிக குறுகிய திரும்பு வளைவு திறன் உள்ளதால்குறுகலான  நகர சலைகளில் சுலபமாக சென்று வருவதற்கு மிக உதவிகரமாக இருக்கும்.ஓட்டுனர் மற்றும் மற்றொரு பயணி செல்வதற்கு உகந்த கேபின்களுடன் தயாரிக்கப்படுகின்றன.வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களுடைய தனித்தன்மையான வடிவமைப்புகளுடன் தயாரிப்பதால் இவ்வகை வாகனங்களுக்கு இடையே சிறு சிறு வேறுபாடுகள் இருக்கும்.பெரும்பாலானவைகள் கேபின் தூக்கி இஞ்சின் பார்வை இடும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.இதன் காரணமாக அதிக இடவசதி, சப்தம் குறைவாக இருப்பது போன்ற பயன்கள் கிடைக்கும்.தற்போது இவ்வகை வாகனங்கள் உலக தரத்தில் ஓட்டுனர்க்கு சவுகரியமான வகையில் கேபின்கள் பொறுத்தப்படட்டு வருகின்றன்.மிக சிறந்த உட்கட்டமைப்புகள் , மொபைல் சார்ஜர், டிஜிட்டல் மீட்டர்கள், ரெக்கார்ட் வைக்கும் கலன்கள், தண்ணீர் வைக்கும் பிடிமானம் போன்றவை கூடுதல் சவுகரியங்களுடன் இவைகள் தயாரிக்கப்படுகின்றன.இரவு நேர பயணங்களுக்கு ஏற்ப முன்புற முகப்பு விளக்குள் டிரைவர்கள் களைப்பு அடையாமல் ஓட்டுவதற்கு ஏற்ப குடுதல் வெளிச்சங்களுடன் பொறுத்தப்பட்டுள்ளன.இந்த வகை வாகனங்கள் விலை  சுமார் 10 இலட்சத்திலிருந்து தொடங்கலாம் அல்லது பயன்பாட்டுக்கு ஏற்றவாறு கூடுதலோ அல்லது குறையவோ செய்யலாம்.இவ்வகை வாகனங்கள் பற்றிய ஒவ்வொரு கம்பெனி தயாரிப்புகளாக விரிவாக பார்க்கலாம்.
1) TATA Motors
இலகுரக வாகன சந்தையில் தனக்கென தனி முத்திரை பதித்த டாடா வாகனங்கள் 407 வகை வாகனங்களை அனைவரும் அறிந்ததே.
    இதில் 407 Pickup  என்ற குறைந்த இலகு ரக வாகனத்தை பற்றி பார்ப்போம்.இது முன்புற இஞ்சின் அமைந்து செமி பார்வேர்ட் வகை கேபினை கொண்டது ஆகும்.சாலைகள்  தெளிவாகவும் ஓட்டுநர்க்கு சுலபமாக அதிக இடஞ்சல்கள் இல்லாத கேபின் பகுதியை கொண்டுள்ளதால் ஓட்டுனர்களால் விரும்பி ஓட்டப்படும் வாகனம் ஆகும்.முன்புற இஞ்சின் பகுதி அமைந்து உள்ளதால் ஒரு கம்பீர தோற்றத்தை கொண்டிருக்கும்.
  மிகப்பெரிய டீலர் நெட்வொர்க் கொண்ட டாடா நிறுவனத்தின் இந்த வகை வாகனங்கள் பரவலாக அனைத்து மாநிலங்களிலும் விரும்பி வாங்கப்படுகின்றன்.சுமார் 35 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 407 வகை வாகனங்கள் பற்றிய மக்களின் நம்பிக்கை அனைவராலும் விரும்பப்படும் வாகனம் ஆகும்.
  மிக சலப தவணை திட்டங்கள் மூலம் வாகனங்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் டாடா நிறுவனம் தங்களுடைய மேம்படுத்தப்பட்ட சீரிஸ் வகையாக ULTRA அல்ட்ரா என்ற வகையிலும் BS 6 தர கட்டுப்பாடுகளுக்கு உகந்த வாகனங்களை ஒரே வகை பிளாட்பார்ம் தயாரிப்பு அசெம்பளி லைன் வகையிலும் நான்கு சக்கர இலகுரக வாகனங்களையும் தயாரிக்கின்றது.இது TATA ULTRA T7 என்ற வகையில் இலகு ரக சரக்கு வாகனம் ஆகும்.2)EICHER MOTORS
Pro 1049
இந்தோ ஜப்பானிய கூட்டு முயற்சியினால் துவக்கப்பட்டு இலகு ரக வாகனத்தில் சிறப்பான இடத்தை பெற்ற ஈச்சர் நிறுவனம் தற்போது கூட்டு நிறுவனம் இல்லாத தனி நிறுவமாக தனித் தன்மையுடன் வாகனங்களை தயாரித்து சந்தை படுத்துகின்றது.Pro சீரிஸ் என்ற வகையில் மேம்படுத்தப்பட்ட வாகனங்களாக BS6 வகை வாகனங்களை இந்நிறுவனம் தயாரிக்கின்றது.இந்த வகை வாகனங்கள் கேபின் தூக்கி இஞ்சினை பார்க்கும் வசதியுடன் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இவ்வகை வாகனங்கள் வெளிவருகின்றன.இவர்கள் BS6  வகை வாகனங்களை தரகட்டுப்பாடு காலத்திற்கு முன்பே தயாரித்து சந்தை படுத்தி வெற்றி கண்டவர்கள்.இவர்களின் சொந்த வடிவமைப்புகளால் மிகச்சிறந்த இலகுரக வாகனங்களை உரிமையாளர்களின் நன்மதிப்பை பெற்றவர்கள்.இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக விரும்பி வாங்கப்படும் வாகனம் ஆகும்.
3) SML ISUZU
முன்பு இந்தோ ஜப்பானிய கூட்டு தயாரிப்பாக இருந்து தற்போதும்  ISUZU  நிறுவனத்துடன் இணைந்து தற்போது இலகு ரக வாகனங்களை தயாரிக்கின்றன் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரில் அமைந்த இந்நிறுவனம் அந்த பகுதியில்மிக பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனம் ஆகும்.தற்போது கூட்டு முயற்சியினால் குளோபல் சீரிஸ் என்ற GS சீரிஸ் வகை பெயர்களுடன் உலகதரத்தில் வாகனங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெளிவருகின்றன.
குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு அதாவது இலகு ரக நீண்டகுழாய்கள் , கம்பிகள் போன்ற  சரக்குகள் வகை வாகனங்களுக்கு இந்நிறுவனத்தின் வாகனங்கள் இந்திய அளவில் சிறப்பானவை ஆகும்.கேரளா போன்ற மாநிலத்தில் இந்நிறுவன தயாரிப்புகள் புகழ்பெற்றது ஆகும்.

4) Ashok Leyland Partner
கனரக வாகன உற்பத்தியில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த அசோக்லேலண்ட் கம்பெனியின் இலகு ரக வர்த்தக வாகனம் பார்ட்டனர் வகை வாகனம் ஆகும்.பல்வேறு கூட்டு நிறுவனங்களை கொண்டிருந்தாலும் இந்த வகை வாகனம் ஜப்பானின் NISSAN கம்பெனியின் கூட்டு தயாரிப்பாக பார்ட்டனர்வகை வாகனங்கள் வெளிவருகின்றன்.மூன்று சிலிண்டர் கொண்ட பிஎஸ் 6 வகை இஞ்சின் இந்த வாகனத்தின் சிறப்பு அம்சமாகும்.அசோக்லேலண்ட் என்றாலே கனரக வாகனங்கள் என்ற எண்ணம் வாடிக்கையாளர்களியே நிலவி வருவதால் இலகுரக வாகன விற்பனையில் சபெரிய இடத்த நிரப்பவில்லை என்பது இந்நிறுனத்தின் ஏமாற்றமே.எந்த வகையிலும் தரத்திற்கு பங்கம் ில்லாத வகையில் எதிர்காலங்களை திட்டமிட்டே அசோக்லேலண்ட் பார்ட்டனர் வகை வர்த்தக வாகனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
5) MAHINDRA JAYO DI3200
பயணிகள் வாகனத்தில் தனக்கென சிறப்பான இடத்தை பிடித்த மஹிந்திரா நிறுவனத்தின் ஜெயோ வகை இவ்வாகனங்கள் மலைபாங்கான பகுதிகளில் வாடிக்கையாளர்களிடெயே நன்மதிப்பைபெற்றுள்ளன்.ஆரம்பத்தில் இந்தோ ஜப்பானிய நிறுவனமாக இருந்து பல்வேறு சிக்கல்களுக்கு பிறகுமுழுமையாக மஹிந்திரா கையகப்படுத்திய பின் இலகு ரக வர்த்தக வாகன உற்பத்தியில் சிறப்பான இடம் பிடித்துள்ளது.
மிக குறைந்த திருப்பு திறன் , மற்றும் இஞ்சின் வெளிபடுத்தும் அதிக சக்தி போன்றவை இவ்வாகனத்தின் சிறப்பு ஆகும்.கேரளா போன்ற மலை பிரதேசங்களில் வாடிக்கையாளர்கள் வருப்ப தேர்வான வாகனமாகும்.பழங்கள் , காய்கறிகள் போன்ற சரக்குகளுக்கான வரும்பி வாங்கப்படுகின்றன மஹிந்திராவின் ஜெயோ DI 3200  வாகனம் ஆகும்.

6) FORCE Motors ShakthiMan 400
சுற்றுலா வாகனத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த டெம்போ டிராவலர் ரக வாகனங்களை தயாரிக்கும் போர்ஸ் நிறுவனத்தின் வர்த்தக இலகுரக வாகனம் Force ShakthiMan 400 ஆகும்.சப்தம் குறைவாகவும், மென்மையான இயக்கங்களுக்கு பெயர்பெற்ற மெர்சிடிஸ் கம்பெனியின் தொழில் நுட்ப உதவியுடன் BS6 வகை மேம்படுத்தப்பட்ட இஞ்சின்களுடன் இவ்வகை வர்த்தக வாகனம் வாடிக்கை யாளர்களுக்கு கிடைக்கின்றது்.இது முன்புற இஞ்சின் அமைப்பை கொண்ட செமிபார்வேர்ட் கேபினை கொண்ட வாகனம் ஆகும்.சாலைகள் தெளிவாகவும் , ஓட்டுவதற்கு மென்மையான வாகனமுமாக இருப்பதால் டிரைவர்களின் விருப்ப தேர்வு இவ்வகை வாகனம் ஆகும்.




2 comments:

  1. Nice To See Such an Interesting Article Over Long Search .Thanks For Sharing .Keep Posting Good Content like this .Also Check xuv 300 Ownership Review

    ReplyDelete
  2. Nice To See Such an Interesting Article Over Long Search .Thanks For Sharing .Keep Posting Good Content like this .Also Check office cleaning service Auckland

    retail stores Cleaning Services Auckland

    Construction Cleaning Service Auckland

    2 BHK in Meerut

    ReplyDelete